ELISHA KOR KRISHNAN

அன்மையில் என் சக நண்பர்களிடமிருந்து வந்த கோரிக்கையினால் நான் கடந்த அக்டபர் 2015-ல் நடைபெற்ற டிரான்ஸ்-பசிஃபிக் கூட்டு ஒப்பந்தம் குரித்து எழுதவுள்ளேன். முதலில் நான் இ    தனைப் பற்றி எழுத எண்ணம் கொள்ளவில்லை காரணம் பொருளாதார நிபுணர்கள் இதனை பற்றி கருத்துரைப்பார்கள் என்று எண்ணினேன். அது குரித்து நான் எதிர்பார்த்த எந்த கருத்தும் கிடைக்கப்பெறாததால், நானே இதனை குரித்து என் சக நண்பர்களுக்கு விவரிக்கவும் இந்த ஒப்பந்ததின் உள்ளடக்கம் என்னவென்றும் இதன் மூலமாக நாம் அனைவருக்கும் என்ன நேரிடும் என்பதனையும் விவரிக்கவே.

டி.பி.பி.ஏ. என்பது பலதரப்பு ஆசிய பசிபிக் நாடுகளின் ஒன்றினைந்த ஒப்பந்தம், அதாவது;

 • ஆஸ்திரேலியா
 • அமேரிக்கா
 • நியூசீலாந்து
 • கனடா
 • மெக்ஸிக்கோ
 • சிலி
 • புரூணை
 • மலேசியா
 • சிங்கபூர்
 • வியட்நாம்
 • ஜப்பான்
 • பெரு

டி.பி.பி.ஏ.(TPPA) என்பது உலகமயமாக்குதலுக்கு ஏற்ப அதன் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக திறந்த சந்தையில் வர்த்தகம் புரிய சந்தையை தாராளமயமாக்கும் ஒரு பேச்சுவார்த்தை.

இந்த டி.பி.பி.ஏ.-வின் பிரச்சனை என்னவென்றால் எல்லா திட்டங்களும் ரகசியமாக செய்யப்படும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அத்திட்டங்கள் அமலுக்கு வரும். இது எதை காட்டுகிறது என்றால் மக்களை ஒரு இருளில் வைப்பது போலகும், திறந்த உலக அனுகுமறையில் இது உண்மையிலே ஒரு விசித்திரமான ஒரு காரியம்.

ஏன் ரகசியபடுத்தபடவேண்டும் என்று வினாவியபோது எம்.இ.தி.இ.(MITI)-யின் ஒரே பதில்; இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு நன்மையானது காரணம் நம் நாட்டு பொருட்கள் மற்ற நாட்டு சந்தையை எட்ட சுலபமாகயிருக்கும் என்றனர். ஆனால் கேள்வி என்னவென்றால், டி.பி.பி.ஏ. மிகவும் நன்மை உள்ளது என்றால், ஏன் ஒப்பந்தத்தின் விபரங்கள் பொது மக்களுக்கு அம்பலப்படுத்தவில்லை? 5 அக்டபர் 2015 ஏன் ரகசியமக்கினார்கள்?

நான் இந்த வினாவை முன்மொழிந்ததன் நோக்கம் என்னவென்றால், இந்த டி.பி.பி.ஏ-வில் சில முரண்படுகள் மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது என்பதை குரித்து நான் மிகவும் ஐய்யம்கொள்கிறேன். நாம் தெரிந்துக்கொள்ளவேண்டிய சில பாதிப்புகளைக் குரித்து பின்வருமாறு சுறுக்கமாக குரிப்பிட்டுள்ளேன்:

 1. 80% மருந்துகளின் விலை இன்று உள்ள விலை கட்டுப்பட்டை விட அதிகரிக்கும். தற்பொழுது விற்க்கப்படும் மலிவான மருந்துகள் இனி விற்க்கபடாது காரணம் இனிமேல் அசலான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து மட்டுமே மலேசியா மருந்துகளை வாங்கும் நிபந்தனைக்கு உட்படுத்தப்படும். இதன் விளைவாக குரைந்த மற்றும் நடுதர வருமானம் பெரும் மக்கள் அதிக விலையிலான மருந்துகளை வாங்க சிரமத்தை எதிர்கொள்வார்கள். உதாரணத்திற்கு, புற்றுநோய் வியாதியுள்ள ஒரு ஆசிரியருக்கு ரி.ம.7000 மருத்துவ செலவு என்றால், அவரால் இவ்வளவு அதிக விலையிலான மருத்துவ செலவுகளை ஏற்க்க முடியுமா? இவ்வாரான நிலையை மக்களால் சமாளிக்க கூடுமா?

 

 1. ராட்ச்ச நிறுவனங்கள் சுதந்திரமாக வனிகம் செய்யமுடியும். இதனால் சிறுபான்மை தொழில் முனைவர்கள் ராட்ச்ச நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும். மக்களைவிட அந்நிய நாட்டு நிறுவனங்கள் அதிக முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. அமேரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு நம் நாட்டு பொருளாதரத்தில் அத்து மீறி நுளைய உரிமை வழங்கப்படுகிறது.

 

 • வெளிநாட்டு வனிபர்களின் உரிமையை குரைக்கும் அல்லது அவர்களின் வானிபத்தை தடுக்கும் நாட்டின் செயல்முறைகளை எதிர்த்து ஜினீவா, வாஸீங்டனிலுள்ள அனைத்துலக பயனிட்டாளர் நீதிமன்ரத்தில் நம் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். இதனால் நம் அரசாங்கம் மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்ததை நிர்னயம் செய்வதில் தனது செயல்பாட்டை இலக்குகிறது.

 

 1. நம் விவசாயிகள் வெளிநாட்டு விவசய உற்பத்தியோடு போட்டியிட வேண்டும். டி.பி.பி.ஏ. உள்நாட்டு அரிசி உர்பத்திக்கு பெரிதும் பாதிப்பை உண்டுபண்ணும் காரணம் அமேரிக்காவின் அரிசி நம் நாட்டில் விற்பனை செய்ய அதிக மானியம் பெரும். டி.பி.பி.ஏ. அமலுக்கு வந்தால் நூற்றுக்கனக்கான நெல் உர்பத்தி செய்யும் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

 

 1. டி.பி.பி.ஏ. வர்த்தகம், சட்டதுறை சேவை மேலும் மற்ற நிபுனத்துவ சேவைகளும் இது போன்ற திறந்த சந்தையில் போட்டியிட நேரிடும். சேவை அடிப்படையிலான தொழில் துறைகள் ராட்ச்ச நிறுவனங்களோடு சவால்களை எதிர்நோக்க கூடுமா?

 

 1. டி.பி.பி.ஏ. எல்லா புத்தகங்ளுக்கும் 50 ஆண்டுகளிருந்து 120 ஆண்டுகள் பதிப்புரிமை பாதுகாப்பு வழங்கவுள்ளது. இலவசமான மற்றும் டிஜிட்டல் புத்தகங்கள் இனி பயனிட்டாளர்களுக்கு கட்டுபடுத்தப்படும். இதனால் எல்லா புத்தகங்களும் விலை கொடுத்து வாங்கபட வேண்டும் அல்லது வாடகை கட்ட வேண்டும், ஒட்டுமொத்தமாக எல்லா அறிவு சம்பந்தமான வசதிகள் மக்களுக்கு கட்டுபடுத்தபடும்.

 

எனவே டி.பி.பி.ஏ.-வின் பாதிப்பு மக்களுக்கும் நாட்டுக்கும் பெரிதான ஒன்று, ஆகவே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்குள் நான் அரசாங்கத்தை கீழ்காணும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கெஞ்சுகிறேன், அதாவது:

 1. டி.பி.பி.ஏ.-வின் பேச்சுவார்த்தை நல்ல வரவேற்பு கிட்டும் வரை தர்சமயம் ஒத்திவைக்குமாறு பணிக்கிறேன். மக்களுக்கு எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ளவும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் உரிமை உள்ளது காரணம் இந்த ஒப்பந்தம் மக்களின் வாழ்க்கை தரத்தை அடிப்படையாகக்கொண்டது.

 

 1. சட்டசபை உறுப்பினர்களக்கு இது குரித்து தெரிவிக்கப்படவேண்டும் மேலும் இந்த ஒப்பந்தத்தின் நன்மை தீமை குரித்து நாடாளமன்றத்தில் பரிதுரைக்கவேண்டும். இது குரித்து விவாதிக்கையில், கட்சியின் நலனை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், சட்டசபை உறுப்பினர்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் எவ்விதத்தில் இது நன்மையை கொண்டுவரும் என்று சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

 

 • அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு தகுதி வழங்கப்படுவதை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும். டி.பி.பி.ஏ. நம் நாட்டுக்கு நன்மை தருவதை நான் புரக்கணிக்கவில்லை, காரணம் நாமும் நமது நாட்டு வருமானத்தை ஈட்ட அந்நிய நாட்டு முதலீட்டை நம்பியிருக்கிறோம். இருந்தபோதிலும், இந்த ஒப்பந்தத்தின் விளைவை நான் புரிந்துக்கொண்டதில், இந்த டி.பி.பி.ஏ. பேச்சுவார்த்தையை மீண்டும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் காரணம் மக்களுக்கு அதன் பின் விளைவுகள் பெரிதான ஒன்றாகும். ஓருவேளை அரசாங்கம் அதன் பாதிப்பு நன்மையை விட அதிகம் உள்ளது என்று கருதினால் இந்த ஒப்பந்ததிலிருந்து வெளியேற கால அவகாசம் இன்னும் உள்ளது.

எனது ஒரே எதிர்பார்ப்பு என்னவென்றால் சட்டசபை உறுப்பினர்கள் எடுக்கப்போகும் முடிவானது; நம் வருங்கால நம் சந்ததிகள் உலகமையமான ஒப்பந்ததில் மாண்டுபோகவிடகூடாது என்பதே.

திருமதி எலிசா கோர் கிருஸ்னன்.

மலேசிய போசிடிவ் டிரிட்மன் அக்சேஸ் & அட்வோகசி குரூப் (எம்.தி.எ.எ.ஜி+)